நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக அஸ்மி பதவியுயர்வு
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்து வரும் ஏ.எல்.எம். அஸ்மி. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த பதவியுயர்வு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் 23 பேர் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு சிறப்பு தர அதிகாரிகளாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர், இதில் அஸ்மி மாத்திரமே முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவராவார்.
பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகர சபைகளின் ஆணையாளராகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளராகவும் பதிவாளராகவும் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் 22 வருட காலமாக இவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)